இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், சீரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தாய் தந்தையை இழந்து தனது பாட்டியின் அரவணைப்பில் வளரும் மற்றும் கல்விப்பயிலும் கீழ்காணும் இரு பெண் குழந்தைகளின் கல்விக்காக உதவிக்கோரிய அக்கிராம மக்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது

படம்
மாறன் அறக்கட்டளை சார்பாக (29-06-2025) இன்று கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், சீரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தாய் தந்தையை இழந்து தனது பாட்டியின் அரவணைப்பில் வளரும் மற்றும் கல்விப்பயிலும் கீழ்காணும் இரு பெண் குழந்தைகளின் கல்விக்காக உதவிக்கோரிய அக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அக்கிராமத்திற்கு ஆய்விற்கு சென்று அந்த குழந்தைகளின் நிலை அறிந்து அவர்களின் கல்வி செலவினை முழுவதுமாக மாறன் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது. மேலும், அக்குழந்தைகள் வசிக்கும் இருப்பிடம் மோசமானதாகவும் விஷ பூச்சிகள் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் இருப்பதால் வேறு பல அமைப்புகளும் அவர்களுக்கு வீடு கட்டும் பணிக்கு உதவுவதாக அறிவித்துள்ளன. அதன்படி வீட்டிற்கான வாசல் கால் மற்றும் கதவு செய்யும் பணிக்கான செலவினை மாறன் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது. உடன் மாறன் அறக்கட்டளையின் தலைவர்/நிர்வாக அறங்காவலர் திரு. சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் திரு. விஜயகுமார் மூர்த்தி மற்றும் பொருளாளர் திரு. வினோத்குமார் பீட்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் பேரூராட்சியை சேர்ந்த தந்தையின் ஆதரவு இல்லாமல் தனது தாயின் அரவணைப்பில் வளரும் மற்றும் கல்வி பயிலும் மாணவி ஜீவிதா(18) 12 ஆம் வகுப்பிற்கு மேல் தனது கல்வியை தொடரமுடியாத நிலையில் நமது மாறன் அறக்கட்டளையின் தஞ்சாவூர் மாவட்ட கள செயல்பாட்டு தலைவர் புரவலர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களின் வாயிலாக அந்த மாணவியின் கல்விச் செலவினை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது

படம்
மாறன் அறக்கட்டளை சார்பாக இன்று (27-06-2025) தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் பேரூராட்சியை சேர்ந்த தந்தையின் ஆதரவு இல்லாமல் தனது தாயின் அரவணைப்பில் வளரும் மற்றும் கல்வி பயிலும் மாணவி ஜீவிதா (வயது 18) 12 ஆம் வகுப்பிற்கு மேல் தனது கல்வியை தொடரமுடியாத நிலையில் நமது மாறன் அறக்கட்டளையின் தஞ்சாவூர் மாவட்ட கள செயல்பாட்டு தலைவர் புரவலர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களின் முயற்சியில் அந்த மாணவி கல்லூரியில் (B.COM) சேர்க்கப்பட்டார் . மேலும் கல்லூரி அவரது வீட்டிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால்  அம்மாணவி நடந்து சென்று வரும் நிலை உள்ளது. அந்த மாணவியின் நிலை அறிந்து அவருக்கு கல்லூரி சென்று வர மாறன் அறக்கட்டளை சார்பாக மிதிவண்டி வழங்கப்பட்டது மற்றும் அந்த மாணவியின் கல்விச்செலவினை முழுவதுமாக மாறன் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது. உடன் மாறன் அறக்கட்டளையின் தலைவர்/நிர்வாக அறங்காவலர் திரு. சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் திரு. விஜயகுமார் மூர்த்தி மற்றும் பொருளாளர் திரு. வினோத்குமார் பீட்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுக்கா, குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த குழந்தை சஞ்சனி (வயது 9) அவர்களின் இந்த கல்வி ஆண்டிற்கான செலவினங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேவையான பொருட்கள் நேரில் சென்று வழங்கப்பட்டது

படம்
இன்று (01.06.2025) மாறன் அறக்கட்டளை சார்பாக, KTR Farms உரிமையாளர் புரவலர் திரு கார்த்திகேயன் அவர்களின் புதல்வி செல்வி மஹதி அவர்களின் 13 ஆம் ஆண்டு பிறந்தநாளை (28-05-2025) முன்னிட்டு கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுக்கா, குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த குழந்தை சஞ்சனியின் (வயது 9) இந்த கல்வி ஆண்டிற்கான சீருடை, புத்தகம், குறிப்பேடு, எழுதுப்பொருட்கள், காலணி மற்றும் புத்தகப்பை முதலியவற்றின் செலவினை ஏற்பதாக உறுதியளித்ததை அடுத்து அக்குழந்தைக்கு மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களும் நேரில் சென்று வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். உடன் மாறன் அறக்கட்டளையின் தலைவர் / நிர்வாக அறங்காவலர் திரு சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் திரு விஜயகுமார் மூர்த்தி  ஆகியோர் கலந்து கொண்டனர்.