தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் பேரூராட்சியை சேர்ந்த தந்தையின் ஆதரவு இல்லாமல் தனது தாயின் அரவணைப்பில் வளரும் மற்றும் கல்வி பயிலும் மாணவி ஜீவிதா(18) 12 ஆம் வகுப்பிற்கு மேல் தனது கல்வியை தொடரமுடியாத நிலையில் நமது மாறன் அறக்கட்டளையின் தஞ்சாவூர் மாவட்ட கள செயல்பாட்டு தலைவர் புரவலர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களின் வாயிலாக அந்த மாணவியின் கல்விச் செலவினை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது
மாறன் அறக்கட்டளை சார்பாக இன்று (27-06-2025) தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் பேரூராட்சியை சேர்ந்த தந்தையின் ஆதரவு இல்லாமல் தனது தாயின் அரவணைப்பில் வளரும் மற்றும் கல்வி பயிலும் மாணவி ஜீவிதா (வயது 18) 12 ஆம் வகுப்பிற்கு மேல் தனது கல்வியை தொடரமுடியாத நிலையில் நமது மாறன் அறக்கட்டளையின் தஞ்சாவூர் மாவட்ட கள செயல்பாட்டு தலைவர் புரவலர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களின் முயற்சியில் அந்த மாணவி கல்லூரியில் (B.COM) சேர்க்கப்பட்டார் .
மேலும் கல்லூரி அவரது வீட்டிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் அம்மாணவி நடந்து சென்று வரும் நிலை உள்ளது. அந்த மாணவியின் நிலை அறிந்து அவருக்கு கல்லூரி சென்று வர மாறன் அறக்கட்டளை சார்பாக மிதிவண்டி வழங்கப்பட்டது மற்றும் அந்த மாணவியின் கல்விச்செலவினை முழுவதுமாக மாறன் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது.
உடன் மாறன் அறக்கட்டளையின் தலைவர்/நிர்வாக அறங்காவலர் திரு. சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் திரு. விஜயகுமார் மூர்த்தி மற்றும் பொருளாளர் திரு. வினோத்குமார் பீட்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.