கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுக்கா, குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த குழந்தை சஞ்சனி (வயது 9) அவர்களின் இந்த கல்வி ஆண்டிற்கான செலவினங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேவையான பொருட்கள் நேரில் சென்று வழங்கப்பட்டது
இன்று (01.06.2025) மாறன் அறக்கட்டளை சார்பாக, KTR Farms உரிமையாளர் புரவலர் திரு கார்த்திகேயன் அவர்களின் புதல்வி செல்வி மஹதி அவர்களின் 13 ஆம் ஆண்டு பிறந்தநாளை (28-05-2025) முன்னிட்டு கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுக்கா, குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த குழந்தை சஞ்சனியின் (வயது 9) இந்த கல்வி ஆண்டிற்கான சீருடை, புத்தகம், குறிப்பேடு, எழுதுப்பொருட்கள், காலணி மற்றும் புத்தகப்பை முதலியவற்றின் செலவினை ஏற்பதாக உறுதியளித்ததை அடுத்து அக்குழந்தைக்கு மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களும் நேரில் சென்று வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
உடன் மாறன் அறக்கட்டளையின் தலைவர் / நிர்வாக அறங்காவலர் திரு சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் திரு விஜயகுமார் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.