கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

03-05-2025 அன்று மாறன் அறக்கட்டளை சார்பாக கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், வேப்பூர் ஊராட்சியின் காவல் ஆய்வாளர் திருமதி சசிகலா அம்மையார் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார்.

உடன், மாநில துணைத்தலைவர் சி.குமார் மற்றும் மாறன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் விஜயகுமார் மூர்த்தி, பொருளாளர் வினோத்குமார் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியினை சிறப்பூட்டும் விதமாக புரவலர் திரு. பழனி (LIC) அவர்களின் தாயார் நினைவுநாளுக்கு வழங்கப்பட்ட நிதி 2,000 ருபாய் மற்றும் புரவலர் திருமதி பவானி விஜயகுமார் அவர்களால் வழங்கப்பட்ட நிதி 10,000 ருபாய் தொகைகள் பல்வேறு மாற்றுத்திறனாளிகளின் நலத்திட்ட உதவிக்கு பயன்படுத்தப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.









இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திர தின விழாவன்று அரசுப்பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் உள்ள சிறப்புப்பள்ளி குழந்தைகள் இவர்களுக்கு இனிப்பு வழங்கும் நோக்கிலும் கடலை மிட்டாய் வியாபாரிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் 5000 குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி சார்ந்த பொருட்கள் வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் நடைபெறும் புத்தகக்கண்காட்சி (2025) இல் தமிழக மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட சேவை அறைக்கான வாடகைத்தொகை மற்றும் அதற்கான துண்டு பிரசுரங்கள் அச்சிட்டும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்க மாநில துணைத் தலைவர் திரு சி. குமார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வழங்கப்பட்டது

சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசுப்பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் உள்ள சிறப்புப்பள்ளி குழந்தைகள் இவர்களுக்கு இனிப்பு வழங்கும் நோக்கிலும் கடலை மிட்டாய் வியாபாரிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் 5000 குழந்தைகளுக்கு இனிப்பு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது