கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுக்கா, குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த குழந்தை சஞ்சனி (வயது 9) அவர்களின் கல்விக்கு உதவிக்கோரிய அக்கிராம மக்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது
இன்று (28-05-2025) மாறன் அறக்கட்டளை சார்பாக கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுக்கா, குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த குழந்தை சஞ்சனி (வயது 9), தந்தையை இழந்து முதிர்வுற்ற தாயின் அரவணைப்பில் 4ஆம் வகுப்பில் கல்வி பயிலும் இந்த குழந்தையின் கல்விக்கு உதவிக்கோரிய அந்த கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அக்கிராமத்திற்கு ஆய்விற்கு சென்று அக்குழந்தையின் நிலை அறிந்து அவர்களின் கல்விச்செலவை மாறன் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் KTR Farms உரிமையாளர் புரவலர் திரு கார்த்திகேயன் அவர்களின் புதல்வி செல்வி மஹதி அவர்களின் 13 ஆம் ஆண்டு பிறந்தநாளை (28-05-2025) முன்னிட்டு மேல் குறிப்பிட்ட குழந்தை சஞ்சனியின் இந்த கல்வி ஆண்டிற்கான சீருடை, புத்தகம், குறிப்பேடு, எழுதுப்பொருட்கள், காலணி மற்றும் புத்தகப்பை முதலியவற்றின் செலவினை ஏற்பதாக உறுதியளித்துள்ளார்.
அவர்களுக்கு மாறன் அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த நன்றிகளையும் செல்வி மஹதி அவர்கள் வளத்துடன் வாழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
குழந்தை சஞ்சனி பற்றிய விவரங்கள்: