கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், சீரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தாய் தந்தையை இழந்து தனது பாட்டியின் அரவணைப்பில் வளரும் மற்றும் கல்விப்பயிலும் கீழ்காணும் இரு பெண் குழந்தைகளின் கல்விக்காக உதவிக்கோரிய அக்கிராம மக்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது

மாறன் அறக்கட்டளை சார்பாக (29-06-2025) இன்று கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், சீரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தாய் தந்தையை இழந்து தனது பாட்டியின் அரவணைப்பில் வளரும் மற்றும் கல்விப்பயிலும் கீழ்காணும் இரு பெண் குழந்தைகளின் கல்விக்காக உதவிக்கோரிய அக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அக்கிராமத்திற்கு ஆய்விற்கு சென்று அந்த குழந்தைகளின் நிலை அறிந்து அவர்களின் கல்வி செலவினை முழுவதுமாக மாறன் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது.

மேலும், அக்குழந்தைகள் வசிக்கும் இருப்பிடம் மோசமானதாகவும் விஷ பூச்சிகள் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் இருப்பதால் வேறு பல அமைப்புகளும் அவர்களுக்கு வீடு கட்டும் பணிக்கு உதவுவதாக அறிவித்துள்ளன. அதன்படி வீட்டிற்கான வாசல் கால் மற்றும் கதவு செய்யும் பணிக்கான செலவினை மாறன் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது.

உடன் மாறன் அறக்கட்டளையின் தலைவர்/நிர்வாக அறங்காவலர் திரு. சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் திரு. விஜயகுமார் மூர்த்தி மற்றும் பொருளாளர் திரு. வினோத்குமார் பீட்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசுப்பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் உள்ள சிறப்புப்பள்ளி குழந்தைகள் இவர்களுக்கு இனிப்பு வழங்கும் நோக்கிலும் கடலை மிட்டாய் வியாபாரிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் 5000 குழந்தைகளுக்கு இனிப்பு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் நடைபெறும் புத்தகக்கண்காட்சி (2025) இல் தமிழக மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட சேவை அறைக்கான வாடகைத்தொகை மற்றும் அதற்கான துண்டு பிரசுரங்கள் அச்சிட்டும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்க மாநில துணைத் தலைவர் திரு சி. குமார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வழங்கப்பட்டது

சுதந்திர தின விழாவன்று அரசுப்பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் உள்ள சிறப்புப்பள்ளி குழந்தைகள் இவர்களுக்கு இனிப்பு வழங்கும் நோக்கிலும் கடலை மிட்டாய் வியாபாரிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் 5000 குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி சார்ந்த பொருட்கள் வழங்கப்பட்டது