சுதந்திர தின விழாவன்று அரசுப்பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் உள்ள சிறப்புப்பள்ளி குழந்தைகள் இவர்களுக்கு இனிப்பு வழங்கும் நோக்கிலும் கடலை மிட்டாய் வியாபாரிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் 5000 குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி சார்ந்த பொருட்கள் வழங்கப்பட்டது
தீர்மானத்தின்படி, மாறன் அறக்கட்டளை சார்பாக, (15-07-2025) அன்று கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் அரசுப்பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் உள்ள சிறப்புப்பள்ளி குழந்தைகள் இவர்களுக்கு இனிப்பு வழங்கும் நோக்கிலும் கடலை மிட்டாய் வியாபாரிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள அரசுப்பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் உள்ள சிறப்புப்பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட 5000 குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், எழுதுகோல், அளவுகோல், அழிப்பான் முதலியன வழங்கப்பட்டது.
அதன்படி கீழ்கண்ட பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி சார்ந்த பொருட்கள் வழங்கப்பட்டது.
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி - ஆனத்தூர்
- அரசு மேல்நிலைப் பள்ளி - ஆனத்தூர்
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - காரப்பட்டு
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி- சலவாதி
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி- எடப்பாளையம்
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி- மேல் மாம்பட்டு
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி- கூட்டேரிபட்டு
- அரசு மேல்நிலைப் பள்ளி - மருங்கூர்
- அரசு மேல்நிலைப் பள்ளி - இருப்பு
- ஊராட்சி அலுவலகம் - இருப்பு
- ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி - சிறுதொண்டமதேவி
- அங்கன் வாடி மையம் - சிறுதொண்டமதேவி
- C.K சிறப்பு பள்ளி - கீழகொல்லை
- வசந்தம் சிறப்பு பள்ளி- ஆபத்தாரணபுரம்
- மன வளர்ச்சி குன்றிய மற்றும் பார்வை குறைபாடு உடைய சிறார்களுக்கான சிறப்பு பள்ளி - பண்ருட்டி
இந்நிகழ்வினை சிறப்பாக நடத்தி முடிக்க உதவிய அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் மேலும், பொருளாதார உதவிகளை வழங்கிய புரவலர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
உடன் மாறன் அறக்கட்டளையின் தலைவர்/நிர்வாக அறங்காவலர் திரு. சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் திரு. விஜயகுமார் மூர்த்தி மற்றும் பொருளாளர் திரு. வினோத்குமார் பீட்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.