இடுகைகள்

சுதந்திர தின விழாவன்று அரசுப்பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் உள்ள சிறப்புப்பள்ளி குழந்தைகள் இவர்களுக்கு இனிப்பு வழங்கும் நோக்கிலும் கடலை மிட்டாய் வியாபாரிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் 5000 குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி சார்ந்த பொருட்கள் வழங்கப்பட்டது

படம்
தீர்மானத்தின்படி, மாறன் அறக்கட்டளை சார்பாக, (15-07-2025) அன்று கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் அரசுப்பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் உள்ள சிறப்புப்பள்ளி  குழந்தைகள் இவர்களுக்கு இனிப்பு வழங்கும் நோக்கிலும் கடலை மிட்டாய் வியாபாரிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள அரசுப்பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் உள்ள சிறப்புப்பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட 5000 குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், எழுதுகோல், அளவுகோல், அழிப்பான் முதலியன வழங்கப்பட்டது. அதன்படி கீழ்கண்ட பள்ளிகளுக்கு சென்று குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி சார்ந்த பொருட்கள் வழங்கப்பட்டது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி - ஆனத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி - ஆனத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி- சலவாதி  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி- எடப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி- மேல் மாம்பட்டு  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி- கூட்டேரிபட்டு அரசு மேல்நிலைப் பள்ளி - மருங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளி ...

சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசுப்பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் உள்ள சிறப்புப்பள்ளி குழந்தைகள் இவர்களுக்கு இனிப்பு வழங்கும் நோக்கிலும் கடலை மிட்டாய் வியாபாரிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் 5000 குழந்தைகளுக்கு இனிப்பு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது

படம்
இன்று (14-08-2025) மாறன் அறக்கட்டளை சார்பாக, (15-07-2025) அன்று கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசுப்பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் உள்ள சிறப்புப்பள்ளி  குழந்தைகள் இவர்களுக்கு இனிப்பு வழங்கும் நோக்கிலும் கடலை மிட்டாய் வியாபாரிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள அரசு பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் உள்ள சிறப்பு பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட 5000 குழந்தைகளுக்கு கடலை மிட்டாய், எழுதுகோல், அளவுகோல், அழிப்பான் முதலியன வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. உடன் மாறன் அறக்கட்டளையின் தலைவர்/நிர்வாக அறங்காவலர் திரு. சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் திரு. விஜயகுமார் மூர்த்தி மற்றும் பொருளாளர் திரு. வினோத்குமார் பீட்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் நடைபெறும் புத்தகக்கண்காட்சி (2025) இல் தமிழக மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட சேவை அறைக்கான வாடகைத்தொகை மற்றும் அதற்கான துண்டு பிரசுரங்கள் அச்சிட்டும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்க மாநில துணைத் தலைவர் திரு சி. குமார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வழங்கப்பட்டது

படம்
மாறன் அறக்கட்டளை சார்பாக (01-07-2025) அன்று கடலூர் மாவட்டம், நெய்வேலியில் நடைபெறும் புத்தகக்கண்காட்சி (2025) இல் தமிழக மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட சேவை அறைக்கான வாடகைத்தொகை ருபாய் 3000 மற்றும் அதற்கான துண்டு பிரசுரங்கள் மூவாயிரம்  அச்சடித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்க மாநில துணைத் தலைவர் திரு சி. குமார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வழங்கப்பட்டது. உடன் மாறன் அறக்கட்டளையின் தலைவர்/நிர்வாக அறங்காவலர் திரு. சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் திரு. விஜயகுமார் மூர்த்தி மற்றும் பொருளாளர் திரு. வினோத்குமார் பீட்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், சீரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தாய் தந்தையை இழந்து தனது பாட்டியின் அரவணைப்பில் வளரும் மற்றும் கல்விப்பயிலும் கீழ்காணும் இரு பெண் குழந்தைகளின் கல்விக்காக உதவிக்கோரிய அக்கிராம மக்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது

படம்
மாறன் அறக்கட்டளை சார்பாக (29-06-2025) இன்று கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், சீரங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தாய் தந்தையை இழந்து தனது பாட்டியின் அரவணைப்பில் வளரும் மற்றும் கல்விப்பயிலும் கீழ்காணும் இரு பெண் குழந்தைகளின் கல்விக்காக உதவிக்கோரிய அக்கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று அக்கிராமத்திற்கு ஆய்விற்கு சென்று அந்த குழந்தைகளின் நிலை அறிந்து அவர்களின் கல்வி செலவினை முழுவதுமாக மாறன் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது. மேலும், அக்குழந்தைகள் வசிக்கும் இருப்பிடம் மோசமானதாகவும் விஷ பூச்சிகள் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் இருப்பதால் வேறு பல அமைப்புகளும் அவர்களுக்கு வீடு கட்டும் பணிக்கு உதவுவதாக அறிவித்துள்ளன. அதன்படி வீட்டிற்கான வாசல் கால் மற்றும் கதவு செய்யும் பணிக்கான செலவினை மாறன் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது. உடன் மாறன் அறக்கட்டளையின் தலைவர்/நிர்வாக அறங்காவலர் திரு. சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் திரு. விஜயகுமார் மூர்த்தி மற்றும் பொருளாளர் திரு. வினோத்குமார் பீட்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் பேரூராட்சியை சேர்ந்த தந்தையின் ஆதரவு இல்லாமல் தனது தாயின் அரவணைப்பில் வளரும் மற்றும் கல்வி பயிலும் மாணவி ஜீவிதா(18) 12 ஆம் வகுப்பிற்கு மேல் தனது கல்வியை தொடரமுடியாத நிலையில் நமது மாறன் அறக்கட்டளையின் தஞ்சாவூர் மாவட்ட கள செயல்பாட்டு தலைவர் புரவலர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களின் வாயிலாக அந்த மாணவியின் கல்விச் செலவினை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டது

படம்
மாறன் அறக்கட்டளை சார்பாக இன்று (27-06-2025) தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் பேரூராட்சியை சேர்ந்த தந்தையின் ஆதரவு இல்லாமல் தனது தாயின் அரவணைப்பில் வளரும் மற்றும் கல்வி பயிலும் மாணவி ஜீவிதா (வயது 18) 12 ஆம் வகுப்பிற்கு மேல் தனது கல்வியை தொடரமுடியாத நிலையில் நமது மாறன் அறக்கட்டளையின் தஞ்சாவூர் மாவட்ட கள செயல்பாட்டு தலைவர் புரவலர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களின் முயற்சியில் அந்த மாணவி கல்லூரியில் (B.COM) சேர்க்கப்பட்டார் . மேலும் கல்லூரி அவரது வீட்டிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால்  அம்மாணவி நடந்து சென்று வரும் நிலை உள்ளது. அந்த மாணவியின் நிலை அறிந்து அவருக்கு கல்லூரி சென்று வர மாறன் அறக்கட்டளை சார்பாக மிதிவண்டி வழங்கப்பட்டது மற்றும் அந்த மாணவியின் கல்விச்செலவினை முழுவதுமாக மாறன் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது. உடன் மாறன் அறக்கட்டளையின் தலைவர்/நிர்வாக அறங்காவலர் திரு. சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் திரு. விஜயகுமார் மூர்த்தி மற்றும் பொருளாளர் திரு. வினோத்குமார் பீட்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுக்கா, குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த குழந்தை சஞ்சனி (வயது 9) அவர்களின் இந்த கல்வி ஆண்டிற்கான செலவினங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேவையான பொருட்கள் நேரில் சென்று வழங்கப்பட்டது

படம்
இன்று (01.06.2025) மாறன் அறக்கட்டளை சார்பாக, KTR Farms உரிமையாளர் புரவலர் திரு கார்த்திகேயன் அவர்களின் புதல்வி செல்வி மஹதி அவர்களின் 13 ஆம் ஆண்டு பிறந்தநாளை (28-05-2025) முன்னிட்டு கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுக்கா, குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த குழந்தை சஞ்சனியின் (வயது 9) இந்த கல்வி ஆண்டிற்கான சீருடை, புத்தகம், குறிப்பேடு, எழுதுப்பொருட்கள், காலணி மற்றும் புத்தகப்பை முதலியவற்றின் செலவினை ஏற்பதாக உறுதியளித்ததை அடுத்து அக்குழந்தைக்கு மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களும் நேரில் சென்று வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். உடன் மாறன் அறக்கட்டளையின் தலைவர் / நிர்வாக அறங்காவலர் திரு சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் திரு விஜயகுமார் மூர்த்தி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுக்கா, குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த குழந்தை சஞ்சனி (வயது 9) அவர்களின் கல்விக்கு உதவிக்கோரிய அக்கிராம மக்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது

படம்
இன்று (28-05-2025) மாறன் அறக்கட்டளை சார்பாக கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுக்கா, குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த குழந்தை சஞ்சனி (வயது 9) , தந்தையை இழந்து முதிர்வுற்ற தாயின் அரவணைப்பில் 4ஆம் வகுப்பில் கல்வி பயிலும் இந்த குழந்தையின் கல்விக்கு உதவிக்கோரிய அந்த கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அக்கிராமத்திற்கு ஆய்விற்கு சென்று அக்குழந்தையின் நிலை அறிந்து அவர்களின் கல்விச்செலவை மாறன் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் KTR Farms உரிமையாளர் புரவலர் திரு கார்த்திகேயன் அவர்களின் புதல்வி செல்வி மஹதி அவர்களின் 13 ஆம் ஆண்டு பிறந்தநாளை  (28-05-2025) முன்னிட்டு மேல் குறிப்பிட்ட குழந்தை சஞ்சனியின் இந்த கல்வி ஆண்டிற்கான சீருடை, புத்தகம், குறிப்பேடு, எழுதுப்பொருட்கள், காலணி மற்றும் புத்தகப்பை முதலியவற்றின் செலவினை ஏற்பதாக உறுதியளித்துள்ளார். அவர்களுக்கு மாறன் அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த நன்றிகளையும் செல்வி மஹதி அவர்கள் வளத்துடன் வாழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். குழந்தை சஞ்சனி பற்றிய விவரங்கள்: