மாறன் அறக்கட்டளையின் வங்கி கணக்கு துவங்கப்பட்டது

 


06-02-2025 அன்று மாறன் அறக்கட்டளைக்கு வங்கி கணக்கு பரோடா வங்கி (Bank of Baroda) ஆனத்தூர் கிளையில் தொடங்க ஆவணங்கள் வங்கி கணக்காளரிடம் தலைவர் (சிவக்குமார்) செயலாளர் (விஜயகுமார்) மற்றும் பொருளாளர் (வினோத்குமார்) முன்னிலையில் வழங்கப்பட்டு கணக்கு தொடங்கப்பட்டது. மேலும் வங்கி கணக்கு நிர்வகிக்கும் பொறுப்பு முழுவதும் நிர்வாக அறங்காவலர் திரு த.சிவக்குமார் அவர்களுக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு அரசுப்பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் உள்ள சிறப்புப்பள்ளி குழந்தைகள் இவர்களுக்கு இனிப்பு வழங்கும் நோக்கிலும் கடலை மிட்டாய் வியாபாரிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் 5000 குழந்தைகளுக்கு இனிப்பு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் நடைபெறும் புத்தகக்கண்காட்சி (2025) இல் தமிழக மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட சேவை அறைக்கான வாடகைத்தொகை மற்றும் அதற்கான துண்டு பிரசுரங்கள் அச்சிட்டும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் தொண்டு நல சங்க மாநில துணைத் தலைவர் திரு சி. குமார் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வழங்கப்பட்டது

சுதந்திர தின விழாவன்று அரசுப்பள்ளி குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் உள்ள சிறப்புப்பள்ளி குழந்தைகள் இவர்களுக்கு இனிப்பு வழங்கும் நோக்கிலும் கடலை மிட்டாய் வியாபாரிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் 5000 குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி சார்ந்த பொருட்கள் வழங்கப்பட்டது