கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் கோடைகால நீர் மோர் பந்தல் போடப்பட்டு பொது மக்களுக்கு மோர், தர்பூசணி, வழங்கப்பட்டது
மாறன் அறக்கட்டளை சார்பாக (01.04.2025) கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட ஆறு இடங்களில் கோடைகால நீர் மோர் பந்தல் போடப்பட்டு பொது மக்களுக்கு மோர், தர்பூசணி, வழங்கப்பட்டது. சமூக ஆர்வலர் அரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவினை தொடங்கி வைத்தார்.
உடன் மாறன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் விஜயகுமார் மூர்த்தி, பொருளாளர் வினோத்குமார் பீட்டர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இடங்கள்:
- ஆனத்தூர்
- வையாபுரிப்பட்டினம்
- முத்தாண்டிக்குப்பம்
- கிழக்கிருப்பு
- கொள்ளுக்காரங்குட்டை
- ஆபத்தாணபுரம்