இடுகைகள்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுக்கா, குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த குழந்தை சஞ்சனி (வயது 9) அவர்களின் கல்விக்கு உதவிக்கோரிய அக்கிராம மக்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது

படம்
இன்று (28-05-2025) மாறன் அறக்கட்டளை சார்பாக கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுக்கா, குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த குழந்தை சஞ்சனி (வயது 9) , தந்தையை இழந்து முதிர்வுற்ற தாயின் அரவணைப்பில் 4ஆம் வகுப்பில் கல்வி பயிலும் இந்த குழந்தையின் கல்விக்கு உதவிக்கோரிய அந்த கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அக்கிராமத்திற்கு ஆய்விற்கு சென்று அக்குழந்தையின் நிலை அறிந்து அவர்களின் கல்விச்செலவை மாறன் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் KTR Farms உரிமையாளர் புரவலர் திரு கார்த்திகேயன் அவர்களின் புதல்வி செல்வி மஹதி அவர்களின் 13 ஆம் ஆண்டு பிறந்தநாளை  (28-05-2025) முன்னிட்டு மேல் குறிப்பிட்ட குழந்தை சஞ்சனியின் இந்த கல்வி ஆண்டிற்கான சீருடை, புத்தகம், குறிப்பேடு, எழுதுப்பொருட்கள், காலணி மற்றும் புத்தகப்பை முதலியவற்றின் செலவினை ஏற்பதாக உறுதியளித்துள்ளார். அவர்களுக்கு மாறன் அறக்கட்டளையின் நெஞ்சார்ந்த நன்றிகளையும் செல்வி மஹதி அவர்கள் வளத்துடன் வாழ வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். குழந்தை சஞ்சனி பற்றிய விவரங்கள்:

கடலூர் மாவட்டம், கிழக்கிருப்பு ஊராட்சியில் அமைந்துள்ள இருப்பு அரசியம்மன் கோவில் செடல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முதலியவை வழங்கப்பட்டது

படம்
இன்று (19-05-2025) மாறன் அறக்கட்டளையின் சார்பாக கடலூர் மாவட்டம், கிழக்கிருப்பு ஊராட்சியில் அமைந்துள்ள இருப்பு அரசியம்மன் கோவில் செடல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு மாறன் அறக்கட்டளையின் கிழக்கிருப்பு நீர்மோர் பந்தலில் அறக்கட்டளையின் உணவு ஏற்பாட்டு மேலாளர் புரவலர் திரு சிவபாலன் அவர்களின் தலைமையில் அன்னதானம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முதலியவை வழங்கப்பட்டது. உடன் மாறன் அறக்கட்டளையின் தலைவர்/நிர்வாக அறங்காவலர் திரு சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் திரு விஜயகுமார் மூர்த்தி மற்றும் பொருளாளர் திரு வினோத்குமார் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மகதி சிக்கன் உரிமையாளர் புரவலர் திரு.கார்த்திகேயன் அவர்கள் நன்கொடையில் தெய்வத்திரு. G. பழனிவேல் செட்டியார் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு முத்தாண்டிக்குப்பம் மாறன் அறக்கட்டளையின் நீர் மோர் பந்தலில் பொதுமக்களுக்கு பழச்சாறு, மோர் முதலியன வழங்கப்பட்டது

படம்
13-05-2025 அன்று மாறன் அறக்கட்டளை சார்பாக, மகதி சிக்கன் உரிமையாளர் புரவலர் திரு. கார்த்திகேயன் அவர்கள் நன்கொடையில் தெய்வத்திரு. G. பழனிவேல் செட்டியார் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு முத்தாண்டிக்குப்பம் மாறன் அறக்கட்டளையின் நீர் மோர் பந்தலில் மாறன் அறக்கட்டளையின் கள செயல்பாட்டு தலைவர் திரு. பிரசாந்த் அவர்களின் தலைமையில் பொது மக்களுக்கு பழச்சாறு, மோர் முதலியவை வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

படம்
03-05-2025 அன்று மாறன் அறக்கட்டளை சார்பாக கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் முதலாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், வேப்பூர் ஊராட்சியின் காவல் ஆய்வாளர் திருமதி சசிகலா அம்மையார் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார். உடன், மாநில துணைத்தலைவர் சி.குமார் மற்றும் மாறன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் விஜயகுமார் மூர்த்தி, பொருளாளர் வினோத்குமார் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினை சிறப்பூட்டும் விதமாக புரவலர் திரு. பழனி (LIC) அவர்களின் தாயார் நினைவுநாளுக்கு வழங்கப்பட்ட நிதி 2,000 ருபாய் மற்றும் புரவலர் திருமதி பவானி விஜயகுமார் அவர்களால் வழங்கப்பட்ட நிதி 10,000 ருபாய் தொகைகள் பல்வேறு மாற்றுத்திறனாளிகளின் நலத்திட்ட உதவிக்கு பயன்படுத்தப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

'ழ' ஆதித்தமிழர் தற்காப்புக் கலைக்கோயில் மையத்திற்கு சிலம்பக்கலை பயிற்சி மைதானம் அமைத்துத் தரப்பட்டது

படம்
தீர்மானத்தின்படி, 20-04-2025 அன்று மாறன் அறக்கட்டளை சார்பாக 'ழ' ஆதித்தமிழர் தற்காப்புக் கலைக்கோயில் மையத்திற்கு ஜேசிபி இயந்திரம் மூலம் சிலம்பக்கலை பயிற்சி மைதானம் அமைத்து தரும் பணி நடைபெற்றது. உடன் பயிற்சி ஆசிரியர் சதிஷ், நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் விஜயகுமார் மூர்த்தி, பொருளாளர் வினோத்குமார் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வனத்துறை உதவி ஆய்வாளர் (SI), மாநில வன ஆராய்ச்சி நிலையம் - நெய்வேலி, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பறவைகள், மான்கள், குரங்குகள் மற்றும் பல வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு சுமார் மூன்று இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கபட்டது

படம்
வனத்துறை உதவி ஆய்வாளர் (SI), மாநில வன ஆராய்ச்சி நிலையம் - நெய்வேலி, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 17-04-2025 அன்று மாறன் அறக்கட்டளை சார்பாக பறவைகள், மான்கள், குரங்குகள் மற்றும் பல வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு சுமார் மூன்று இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கபட்டது. உடன் மாறன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் விஜயகுமார் மூர்த்தி, பொருளாளர் வினோத்குமார் பீட்டர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  இந்நிகழ்வில், தங்களது கடின உழைப்பை பங்களித்த அறக்கட்டளை உறுப்பினர்கள்: பிரவீன்   அலெக்ஸாண்டர் பிரஷாந்த்  இந்நிகழ்வினை சிறப்பாக செய்துமுடிக்க உதவிய வனத்துறை உதவி ஆய்வாளர் (SI) அவர்களுக்கும், மாநில வன ஆராய்ச்சி நிலைய ஊழியர்களுக்கும், தங்களது கடின உழைப்பை பங்களித்த அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் மாறன் அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது

படம்
தீர்மானத்தின்படி, 17-04-2025 அன்று மாறன் அறக்கட்டளை சார்பாக பறவைகள் மற்றும் வன உயிர்களின் கோடைகால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. உடன் மாறன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் தண்டபாணி, செயலாளர் விஜயகுமார் மூர்த்தி, பொருளாளர் வினோத்குமார் பீட்டர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  இந்நிகழ்வில், தங்களது கடின உழைப்பை பங்களித்த அறக்கட்டளை உறுப்பினர்கள்: பிரவீன்   அலெக்ஸாண்டர் பிரஷாந்த்  இராமதாஸ் சிவபாலன்  இந்நிகழ்வினை சிறப்பூட்டும் விதமாக நன்கொடை வழங்கிய புரவலர்களுக்கும், தங்களது கடின உழைப்பை பங்களித்த அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் மாறன் அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். செய்தித்தாள்களில்,