இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு முப்பெரும்விழாவில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

படம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அப்பள்ளி முப்பெரும்விழாவில் கலந்து கொண்டு ஒவ்வொரு வகுப்பிலும் கல்வியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மாறன் அறக்கட்டளை சார்பில் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அப்பள்ளிக்கு அறக்கட்டளையின் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

வடக்கு மேல்மாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

படம்
மாறன் அறக்கட்டளை சார்பாக, 24-03-2025 அன்று ஏற்றுக்கொண்ட தீர்மானத்தின் படி 27-03-2025 அன்று கடலூர் மாவட்டம், வடக்கு மேல்மாம்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அப்பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு ஒவ்வொரு வகுப்பிலும் கல்வியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. செய்தித்தாள்களில்,

மேல்மாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பரிசுகள் வழங்க தீர்மானம் இயற்றப்பட்டது

மாறன் அறக்கட்டளை சார்பாக 24-03-2025 அன்று கடலூர் மாவட்டம் ,மேல்மாம்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு பரிசு வழங்க வேண்டும் என்ற பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று 27-03-2025 அன்று நடைபெறும் ஆண்டு விழாவில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என தீர்மானம் இயற்றப்பட்டது.

திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்க தீர்மானம் இயற்றப்பட்டது

மாறன் அறக்கட்டளை சார்பாக விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் கல்வியில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று அவர்களுக்கு பரிசு வழங்க முடிவு செய்து தீர்மானம் இயற்றப்பட்டது.

அரசூர் பள்ளிவாசலில் இஃப்த்தார் நோன்பு திறப்பிற்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

படம்
மாறன் அறக்கட்டளை சார்பாக, 19-03-2025 அன்று விழுப்புரம் மாவட்டம் அரசூர் கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் இஃப்த்தார் நோன்பு திறப்பிற்கு பழக்கலவைகள், நோன்புக்கஞ்சி மற்றும் பேரிச்சை முதலியவற்றை வழங்க வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டு அதன்படி இசுலாமிய சகோதரர்களுக்கு பழக்கலவைகள், நோன்புக்கஞ்சி மற்றும் பேரிச்சை ஆகிய உணவு பொருள்கள் வழங்கப்பட்டது. செய்தித்தாள்களில்,

மாறன் அறக்கட்டளை சார்பாக உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது

படம்
  மாறன் அறக்கட்டளை சார்பாக, 15-03-2025 அன்று கடலூர் மாவட்டம் முத்தாண்டிக்குப்பம் கிராமத்தை சார்ந்த திரு. சிவபாலன் என்ற இளைஞர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு சி.கே மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு சமையல் எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

செம்மேடு அரசு உயர்நிலை பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

படம்
தீர்மானத்தின்படி, 14-03-2025 அன்று மாறன் அறக்கட்டளை சார்பாக கடலூர் மாவட்டம் செம்மேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற   ஆண்டு விழாவில் கலந்து கொண்டு அப்பள்ளி மாணவர்களுக்கு கல்வியில் முதல் மூன்று இடத்தை பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அப்பள்ளிக்கு மாறன் அறக்கட்டளை சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.

சி.கே மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்க தீர்மானம் இயற்றப்பட்டது

படம்
14-03-2025 அன்று மாறன் அறக்கட்டளை சார்பாக கடலூர் மாவட்டம் கீழகொல்லை கிராமத்தில் உள்ள சி .கே மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியின் வேண்டுகோளை ஏற்று அக்குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்களான கோழி இறைச்சி மற்றும் முட்டை வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வாரத்தில் இரண்டு நாட்கள் முட்டை (செவ்வாய், வியாழன்) வாரத்தில் ஒருநாள் கோழி இறைச்சி (ஞாயிறு) வழங்க ஒருமனதாய்  முடிவு செய்யப்பட்டு  தீர்மானம் இயற்றப்பட்டது.

செம்மேடு அரசு உயர்நிலை பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிடப்பட்டது

படம்
  மாறன் அறக்கட்டளை சார்பாக 13-03-2025 அன்று கடலூர் மாவட்டம், செம்மேடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு கல்வியில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க வேண்டுமென தலைவர் (திரு .சிவகுமார்)  செயலாளர் (திரு.விஜயகுமார் ) மற்றும் பொருளாளர் (திரு .வினோத்குமார் ) முன்னிலையில் தீர்மானம் இயற்றப்பட்டு அதன்படி 14-03-2025 அன்று  செம்மேடு அரசு உயர்நிலை பள்ளியில் நடக்கவிருக்கும் ஆண்டு விழாவில் தகுதியான மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

சி.கே மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிடப்பட்டது

படம்
மாறன் அறக்கட்டளை சார்பாக 13-03-2025 அன்று கடலூர் மாவட்டம் கீழக்கொல்லை கிராமத்தில் இயங்கி வரும் சி.கே மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு நேரில் சென்று கோடை வெயில் தாக்கத்தை குறைக்கும் பழக்கலவைகளை அக்குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் அப்பள்ளி குழந்தைகளுக்கு புரதச்சத்து குறைபாடு இருப்பதாகவும் அதற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை மாறன் அறக்கட்டளை குழந்தைகளுக்கு வழங்குமாறு அப்பள்ளி நிர்வாகி திரு.குமார் அவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அவரது கோரிக்கை மனு விரைவில் பரிசீலனை செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

நீர் மோர் பந்தல் போடப்பட்டது

படம்
தீர்மானத்தின்படி, 10-03-2025 அன்று கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் ஆனத்தூர், வையாபுரிபட்டினம், கொள்ளுக்காரன்குட்டை, முத்தாண்டிக்குப்பம், கிழக்கிருப்பு, ஆபத்தானபுரம் ஆகிய ஆறு இடங்களில் அமைக்கப்பட்டது.