சி.கே மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்க தீர்மானம் இயற்றப்பட்டது
14-03-2025 அன்று மாறன் அறக்கட்டளை சார்பாக கடலூர் மாவட்டம் கீழகொல்லை கிராமத்தில் உள்ள சி .கே மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியின் வேண்டுகோளை ஏற்று அக்குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்களான கோழி இறைச்சி மற்றும் முட்டை வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி,
- வாரத்தில் இரண்டு நாட்கள் முட்டை (செவ்வாய், வியாழன்)
- வாரத்தில் ஒருநாள் கோழி இறைச்சி (ஞாயிறு)
வழங்க ஒருமனதாய் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் இயற்றப்பட்டது.