சி.கே மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிடப்பட்டது
மாறன் அறக்கட்டளை சார்பாக 13-03-2025 அன்று கடலூர் மாவட்டம் கீழக்கொல்லை கிராமத்தில் இயங்கி வரும் சி.கே மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு நேரில் சென்று கோடை வெயில் தாக்கத்தை குறைக்கும் பழக்கலவைகளை அக்குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் அப்பள்ளி குழந்தைகளுக்கு புரதச்சத்து குறைபாடு இருப்பதாகவும் அதற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை மாறன் அறக்கட்டளை குழந்தைகளுக்கு வழங்குமாறு அப்பள்ளி நிர்வாகி திரு.குமார் அவர்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அவரது கோரிக்கை மனு விரைவில் பரிசீலனை செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது.