செம்மேடு அரசு உயர்நிலை பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிடப்பட்டது
மாறன் அறக்கட்டளை சார்பாக 13-03-2025 அன்று கடலூர் மாவட்டம், செம்மேடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு கல்வியில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க வேண்டுமென தலைவர் (திரு .சிவகுமார்) செயலாளர் (திரு.விஜயகுமார் ) மற்றும் பொருளாளர் (திரு .வினோத்குமார் ) முன்னிலையில் தீர்மானம் இயற்றப்பட்டு அதன்படி 14-03-2025 அன்று செம்மேடு அரசு உயர்நிலை பள்ளியில் நடக்கவிருக்கும் ஆண்டு விழாவில் தகுதியான மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.